சென்னை: சாய் பிரபா மீனா திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘யோக்கியன்’. ஜெய் ஆகாஷ், ஆர்.எஸ்.கவிதா, சாம்ஸ், குஷி முகர்ஜி, ஆர்த்தி சுரேஷ், தேவி கிருபா, தினேஷ் மேட்னே நடித்துள்ளனர். சார்க்கி, பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதியுள்ளார். சுமன் ஜூப்டி, யு.கே.முரளி இசை அமைத்துள்ளனர். சாய் பிரபா மீனா, கண்ணன் ஜி, ஜாக் ஜி பாடல்கள் எழுதியுள்ளனர். மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரித்துள்ளார். இப்படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறுகையில், ‘சாய் பிரபா மீனாவுக்கு சினிமா பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும், நான் இயக்கி நடிக்கும் ‘மாமரம்’ படத்தில் உதவி இயக்குனராக்கினேன். ‘அமைச்சர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்திலும் பணியாற்றினார். அவருக்கு நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தேன். ஒருநாள் அவர், என்னை வைத்து படம் இயக்க வேண்டும் என்றார். கதை கேட்டேன். அவரால் சொல்ல முடியவில்லை. நானே ‘யோக்கியன்’ கதை எழுதினேன். இதில் நான்கு கதைகள் இருக் கின்றன’ என்றுசொன்னார். சாய் பிரபா மீனா கூறும்போது, ‘நிறைய கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டேன். ஒருவர் கூட மதிக்கவில்லை. சிலர் என் உடையை பார்த்து கேவலப்படுத்தினர். என்னை மதித்து இயக்குனராக்கியவர் ஜெய் ஆகாஷ்’ என்றார்.
35