சென்னை: ‘ஆதிபுருஷ்’ படத்தின் பிரத்தியேக போஸ்டர் மற்றும் ‘ஜெய் ராம்’ என்ற பாடல் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக, ராமர் வேடத்தில் பிரபாஸ் தோன்றிய போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘ஜெய் ராம்’ என்ற பாடல் வெளியிடப் பட்டது. அஜய், அதுல் இசை அமைத்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ளார். டி சீரிஸ் பூஷண் குமார், கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ பைல்ஸ் ராஜேஷ் நாயர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஜூன் 16ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
168