நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷான் இருவரும் தனுஷிற்கு அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வடசென்னை பகுதியை மையப்படுத்தி உருவாகும் இந்த கேங்க்ஸ்டர் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விரைவில் தனுஷின் 50வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.