மும்பை: நடிகை நுஸ்ரத் ஃபரியாயின் இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், தற்போது அவர் ஓய்வில் உள்ளார். பிரபல பாலிவுட் நடிகை நுஸ்ரத் ஃபரியா, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரது கண்ணில் கட்டு கட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவரது பதிவில், ‘பூர்ண குணமடையும் வரை ஓய்வில் இருப்பேன்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து நடிகையின் அம்மா அளித்த பேட்டியில், ‘நுஸ்ரத்தின் இடது கண்ணில் பிரச்னைகள் இருந்தது. இந்த பிரச்னை மேலும் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விரைவில் அவர் குணமடைவார். ஒரு வாரத்தில் மீண்டும் ஷூட்டிங் செல்வார்’ என்று கூறினார்.
46