இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர் எம்.எஸ்.ராஜ் இயக்கிய ’மெரினா புரட்சி’ படத்தில் அறிமுகமானவர், ஸ்ருதி ரெட்டி. தற்போது ‘விசாரணை கைதி’ படத்தில் நடித்து வருகிறார். நட்டி முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், வழக்கறிஞர் கேரக்டரில் ஸ்ருதி ரெட்டி நடிக்கிறார்.
அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான ஒருவருக்காக நீதிமன்றத்தில் வாதாடும் கேரக்டரில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நீதிமன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இக்காட்சிகள் இயக்குனர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருப்பதாகவும் ஸ்ருதி ரெட்டி சொன்னார். பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.