ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல்: தி கோர்’ என்ற படத்தைப் பார்த்த ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள பதிவில், ‘மம்மூட்டி தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்ேட இருக்கிறார். வலி, தனிமை, பயம், அவர் எடுக்க வேண்டிய முடிவுகளின் கணம் என்று, இப்படத்தின் ஒவ்வொரு பார்வையும் என்னை மிகவும் பாதித்தது. இரண்டாம் பாதியில் வரும் ‘என்டே தெய்வமே’ என்ற காட்சி, படத்தின் சிறப்பான ஒரு பகுதியாக இருந்தது.
தியேட்டரில் ஒரு குழந்தையைப் போல் ஓவென்று அழுதேன். ஜியோ பேபியின் ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஓமனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஜோதிகா நீண்ட நாட்களுக்கு எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.