மும்பை: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய இந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா. முன்னதாக நடிகர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து ஸ்ரீ எனும் இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த ஸ்ரீ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான குயின் மற்றும் சூப்பர் 30 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விகாஸ் பல் இயக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படத்தில் ஜோதிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் மாதவன் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த டும்டும்டும் மற்றும் பிரியமான தோழி ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு புது படத்தில் இருவரும் இணைந்து இருப்பதால் இவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
25