சென்னை: அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விடா முயற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். அது வேறொரு கதை. அந்த கதை அஜித்துக்கு பிடிக்காததால் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, இருப்பினும் இதற்கும் அஜித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கதை பிடிக்கவில்லை என்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் அஜித்தின் தந்தை இறந்ததால் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தள்ளிப்போனது. ஏகே 62 படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி என்று தெரிவிக்கப்பட்டது. படத்தின் ப்ரீபுரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அஜித் தற்போது பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ளார், வெளிநாடுகளில் இருந்து அவர் பைக் ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நேற்று அஜித்தின் பிறந்த நாளையொட்டி லைக்கா நிறுவனம் படத்தின் தலைப்பை அறிவித்தது. இந்த படத்துக்கு ‘விடா முயற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.