பெங்களூரு: அஜித்துடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தது பற்றி சிவராஜ்குமார் பேசியுள்ளார். ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். தொடர்ந்து தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி அவர் கூறியது: அஜித் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கேட்டிருந்தார்கள். அப்போது கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்ததால் கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அதற்காக அஜித்துக்கு நான் முடியாது என சொல்லிவிட்டேன் என்பதாக அர்த்தம் கிடையாது. தமிழ் படமா, கன்னட படமா என்ற சூழல் ஏற்பட்டது. அப்போது கன்னட மொழியான எனது தாய் மொழியை தேர்வு செய்வதுதான் எனக்கு முன்னுரிமையாக பட்டது. அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. எனது ரசிகர்களையும் நான் ஏமாற்ற கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால்தான் அஜித் பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.
114