சினிமாவில் நடிப்பதை தவிர்த்து அஜித் குமார் தனது ஓய்வு நேரங்களில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். விரைவில் அவர் உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். தற்போது அவர் தனது பைக் மூலம் இந்தியா முழுக்க சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். பனி படர்ந்த பகுதிகளில் பைக்கில் தனது நண்பர்களுடன் அவர் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் தொடக்க வேலையில் இருப்பதால், தனது இரண்டாம் கட்டத்துக்கான பைக் பயணத்தை அஜித் குமார் மேற்கொண்டுள்ளார். மீண்டும் அவர் உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது உலக சுற்றுலா பகுதி குறித்த மேப் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. அதற்குள் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடிக்க மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.