நடிப்பைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், கார் ரேஸ் மற்றும் ட்ரோன் விமானம் இயக்குவதில் அதிக ஈடுபாடு செலுத்துகிறார். வெளிநாடுகளில் அதிவேகமாக பைக்கில் செல்வதை வாடிக்கையாக்கி விட்ட அவர், சமீபத்தில் சென்னை திரும்பினார். அடுத்து அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் தனது மகன் ஆத்விக்குடன் படிக்கும் மாணவர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அஜித் குமார், தலைக்கு ஹெல்மெட் அணிந்திருந்தார். அவருடன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளிடையே சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த ைசக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித் குமார் சைக்கிள் ஓட்டும் போட்ேடாக்கள் வைரலாகி வருகின்றன.