லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆக்லாந்து திரைப்பட விழாவை தொடர்ந்து ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் மேலும் இரண்டு அமெரிக்க திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. 27வது வருடங்களாக நடந்து வரும் ஆர்ப்பா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 25வது ஆண்டாக நடைபெறும் நியூ போர்ட் பீச் பன்னாட்டு திரைப்பட விழாவிலும் இவ்விரு திரைப்பட விழாக்களிலும் முதன்முதலாக தமிழ் படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இதன் மூலம் இந்த பட விழாக்களில் தேர்வாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இது பெற்றுள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா சகா உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
6