சென்னை: விஜய்யின் 67-வது படமாக தயாராகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் இருந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘நா ரெடி’ என்ற முதல் பாடல் வெளியானது.
இப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்நிலையில், லியோ படத்தில் மேலும் ஒரு இயக்குநர் நடிகராக இணைந்திருக்கிறார். மிஷ்கின், கௌதம் மேனனைத் தொடர்ந்து, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப்பும் படத்தில் சிறு கதாபாத்திரத்திற்கு இணைந்திருக்கிறார்.