தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர், அனுஷ்கா. தற்போது பல இளம் புதுமுக நடிகைகளின் வருகையால் அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. படங்களின் வெற்றியும் அரிதாகிவிட்டது. அவர் நடித்திருந்த ‘பாகுபலி’ 2ம் பாகம் கடந்த 2017ல் வெளியானது. அதற்குப் பிறகு ஒரு வெற்றியைக்கூட அனுஷ்கா சந்திக்கவில்லை. ‘பாகமதி’, ‘சைரா நரசிம்ம ெரட்டி’, ‘நிசப்தம்’ போன்ற படங்கள் வெற்றிபெறவில்லை. இதற்கிடையே அதிகரித்த தன் உடல் எடையைக் குறைக்க மிகவும் சிரமப்பட்டார்.
ஒருவழியாக உடல் எடையைக் குறைத்த பிறகு அவர் நடித்த படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இதில் அனுஷ்கா செஃப் கேரக்டரில் தனி ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணமே செய்துகொள்ளாமல் பெண்களால் தனித்து வாழ முடியும் என்ற கருத்து கொண்ட பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 4ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை அனுஷ்கா மலைபோல் நம்பி காத்திருக்கிறார்.