ஐதராபாத்: மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இதில் நவீன் பொலிஷெட்டி ஹீரோவாக நடித்துள்ளார். பி.மகேஷ் பாபு இயக்கியுள்ளார். கடந்த 7ம் தேதி வெளியான இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள இப்படம், பெண்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சியாக வெளியிடப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருக்கும் 20 தியேட்டர்களில் நடந்த காலைக்காட்சி, பெண்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது. இத்தகவலை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
33