தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுப்பவர் நடிகர் அருள்நிதி. அவர் தற்போது ‘டிமான்டி காலனி’, ‘கோப்ரா’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் “டிமான்டி காலனி 2” படத்தில் நடித்துள்ளார்.
அருள்நிதி தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாகவும் இதுவரை 80% படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும்கூறப்படுகிறது.