சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஸ்ரீநாத் பாஸி, லிங்கேஷ், ‘கபாலி’ விஷ்வந்த் உள்பட பலர் நடிக்கின்றனர். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அகிரன் மோசஸ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங்கை பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார். ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்.
248