சென்னை: கடந்த 1995 அக்டோபர் 23ம் தேதி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு, ஜோதி லட்சுமி, விசித்ரா நடிப்பில் ரிலீசான படம், ‘முத்து’. இதை கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அசோக்ராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. முத்து மீண்டும் வருகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் மீண்டும் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
38