திருவனந்தபுரம்: நஸ்ரியா, பஹத் பாசில் இருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கிறது என்றாலும், திருமணத்துக்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து நஸ்ரியா அளித்துள்ள பேட்டியில், ‘பஹத்தை நான் தேர்வு செய்தது ஏன் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் ஒரே பதில், காதல் என்பதுதான். ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் நடித்தபோது பழக்கம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்ததால் காதலித்து வந்தோம். பிறகு நான் வெளிப்படையாக பஹத்திடம் என் காதலை சொன்னேன். இதற்காகவே காத்திருந்தவரைப் போல் அவரும் ஓ.கே சொல்லிவிட்டார். ‘கடைசி வரை உன்னை ஒரு குழந்தை போல் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன்’ என்று பஹத்திடம் நான் சொன்னேன். அந்த ஒரு வார்த்தையில் பஹத் ரொம்ப உருகி விட்டார். தற்போது எனக்கு பொருத்தமான கேரக்டர்களில் பிசி யாக நடிக் கிறேன்.