சென்னை: இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இப்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா சில நாட்கள் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா படத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து இப்போது அருண் விஜய் இந்த படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் படமாக்கப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிப்பது உறுதியாகியுள்ளது. பாலா தயாரித்த பிசாசு படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இப்போது முதல்முறையாக அவரது இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கிறார்.
54