பெங்களூரு: தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், ஹனிரோஸ். ‘ரேச்சேல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதில் மாட்டடுக்கறியை ரத்தம் சிந்தச்சிந்த, ஒரு கத்தியால் ஹனிரோஸ் வெட்டும் போஸ் கொடுத்த காட்சிகள் இருக்கின்றன. இந்த பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதியவர் ஆனந்தினி பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு சந்துரு செல்வராஜ் இசை அமைக்கிறார். பாவாடை மற்றும் ஜாக்கெட் அணிந்து கொலை வெறியுடன் ஹனிரோஸ் கறி வெட்டுகின்ற காட்சி ‘ரேச்சேல்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்நிலையில், மாட்டை வெட்டுவது போல் எப்படி காட்சி வைக்கலாம் என்று, கர்நாடக மாநில பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், படத்துக்கு தடை விதிக்கவும் கோரியுள்ளனர்.
60