பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரித்துள்ள படம், ‘பெல்’. வெயிலோன் கதை, வசனம் எழுதியுள்ளார். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராபர்ட் இசை அமைத்துள்ளார். பீட்டர் ராஜ் பாடல்கள் எழுத, ஆர்.வெங்கட் புவன் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர், பாதுகாக்கப்பட வேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்கு மட்டும் தெரிவித்தார்.
அந்த ரகசியங்களைப் பாதுகாப்பதில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடந்த போராட்டமே மையக்கரு. நான்லீனியர் முறையில் காதல், குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரம், நடன இயக்குனர் தர், நித்தீஷ் வீரா, பீட்டர் ராஜ் நடித்துள்ளனர். சென்சார் முடிந்துவிட்டது. இன்று ‘பெல்‘ படம் திரைக்கு வருகிறது’ என்றார்.