திரையுலகில் தனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் குறித்து பூமிகா கூறுகையில், ‘இந்தியில் என் முதல் படம், ‘தேரே நாம்’. இதில் சல்மான்கான் ஜோடியாக நடித்தேன். இப்படம் ஹிட்டானதும் முன்னணி நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. திடீரென்று தயாரிப்பாளர் மாறியதால் என்னை நீக்கிவிட்டனர். அப்படத்துக்காக ஒரு ஆண்டு வரை வேறெந்த படமும் ஒப்புக்கொள்ளாமல் காத்திருந்தேன்.
இச்சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதுபோல், ‘ஜஃப் வி மெட்’ படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து நீக்கிவிட்டு, பிறகு கரீனா கபூரை நடிக்க வைத்தனர். ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்திலும், மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திலும் என்னை ஒப்பந்தம் செய்து நீக்கிவிட்டனர்’ என்றார்.