போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொதினேனி நடிக்கும் புதிய படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. அப்போது சண்டை மற்றும் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்ரீரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். ராம் பொதினேனி ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் ராம் பொதினேனி நடித்த படம், ‘தி வாரியர்’ என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொதினேனி நடிக்கும் புதிய படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்ப்பு
71