மும்பை: சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகிய இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை அவர்கள் தங்கள் உறவை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இருவரும் மும்பையிலுள்ள வீட்டில் இணைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி தன் மனைவியை விவாகரத்து செய்தவர். பிறகு அவர் ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை மேற்கொண்டதாக சொல்லப்பட்டது. அதிதி ராவ் ஹைதரியும் ஏற்கனவே திருமணமாகி தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், நேற்று முன்தினம் சித்தார்த் பிறந்தநாள் என்பதால், அதிதி ராவ் ஹைதரி தனது சமூக வலைத்தளத்தின் மூலம் சித்தார்த்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், வெளிநாட்டில் அவர்கள் விடுமுறையைக் கொண்டாட உல்லாசப் பயணம் மேற்கொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் சித்தார்த் குழந்தை போல் குதிக்கிறார். வாழ்த்துச் செய்தியில் அதிதி ராவ் ஹைதரி கூறுகையில், ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மணிகார்ன். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு. திரைப்படங்கள், காதல், இசை என்று வலிமையான மற்றும் தூய்மையான இதயம் கொண்டிருப்பதற்கு. மேஜிக், நிறைய சிரிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும். நீ நீயாக இரு. மகிழ்ச்சியான சித்து நாள்’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
67