சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர்கள் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான் ஆகியோர், ‘எறும்பு’ என்ற சிறுவர்கள் பற்றிய கதையில் சீரியஸ் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள் சக்தி ரித்விக், மோனிகா நடித்துள்ளனர். சுரேஷ் குணசேகரன் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறுகையில், ‘குழந்தைகளின் உலகத்தை வெளிப்படுத்தும் தரமான படங்கள் மிக அரிதாகவே திரைக்கு வரும். அதுபோன்ற ஒரு படம் இது. ஒரு கிராம் மோதிரத்தை சக்தி ரித்விக் தொலைத்துவிடுகிறான். வெளியூர் சென்றுள்ள அப்பா, அம்மா வருவதற்குள் அந்த மோதிரத்தை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். கடைசியில் மோதிரம் கிடைத்ததா? அதற்காக அவனும், அக்கா மோனிகாவும் என்ன முயற்சி செய்தனர் என்பது கதை. கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் ஒரு கிராம் தங்கம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சக்தி ரித்விக்கின் தந்தையாக சார்லி, நண்பராக ஜார்ஜ் மரியான், கந்துவட்டிக்காரராக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர்’ என்றார்.
215