திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுராஜ் வெஞ்ஞாரமூடு. ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ஜனகன மன’ உள்பட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். கொச்சி பாலாரிவட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் வந்த மலப்புரத்தை சேர்ந்த சரத் என்பவர் மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த சரத் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நடிகர் சுராஜ் வெஞ்ஞாரமூடு அலட்சியமாக அதிவேகத்தில் காரை ஓட்டியது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காருடன் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
45