சென்னை: சந்திரமுகி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இதன் 2ம் பாகத்தை பி.வாசுவே இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், ரவிமரியா, விக்னேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் தோன்றும் காட்சிகள் இடம்பெறுகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானபோது, லாரன்ஸ், வேட்டையன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தை செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டீசர் வெளியிடுவதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
75