ஆத்யக் புரொடக்ஷன்ஸ் சார்பில் கவுதம் சொக்கலிங்கம் தயாரிக்கும் படம், ‘கெவி’. இதை தமிழ் தயாளன் இயக்குகிறார். புதுமுகம் ஆதவன், ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் நடிக்கின்றனர். ராசி தங்கதுரை வசனம் எழுதுகிறார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். கொடைக்கானல் அருகிலுள்ள மலைக்கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு குளிர் கடுமையாக இருந்ததால், அங்கு தங்கியிருந்த சில நடிகர், நடிகைகள் பயந்து சென்னைக்கு திரும்பிவிட்டனர். ஆனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 40 நாட்கள் டென்ட்டில் தங்கியிருந்து நடித்த ஷீலா ராஜ்குமாரை படக்குழுவினர் பாராட்டினர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 40 நாட்கள் டென்ட்டில் தங்கியிருந்து நடித்த ஷீலா ராஜ்குமார்
112