சென்னை: காமெடி நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ, கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் காலமானார். சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் சேஷூ நடித்திருந்தார்.