சென்னை: விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒருநாள்’ படத்தை இயக்கிய வெற்றி துரைசாமி, தற்போது பெயரிடப்படாத கிரைம் திரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். 2021ல் ‘என்றாவது ஒருநாள்’ படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு, உலக நாடுகளில் நடந்த பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, 40க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது.
அப்படத்தை தொடர்ந்து வெற்றி துரைசாமி இயக்கும் படத்தில், கிரைம் திரில்லர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாகவும், விரைவில் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.