சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் டான்ஸ் மாஸ்டராக ஜானி பணியாற்றியுள்ளார். இவர் இப்போது ‘ரன்னர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு முன் ‘அரவிந்த் 2’ படத்தை தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விஜய் சௌத்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஜானி மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆக்ஷன் டிராமாவாகமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. காவல் துறையின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த அழுத்தமான படத்தின் மையப்பகுதி தந்தை-மகன் உறவு பற்றியது. பர்ஸ்ட் லுக்கில் ஹீரோ காக்கி பேன்ட் மற்றும் கதர் சட்டை அணிந்துள்ளார். ஒருபுறம் காக்கி சீருடையும் மறுபுறம் கதரும் ‘ரன்னர்’ கதையின் கருவுடன் தொடர்புடைய ஒன்றைக் குறிக்கிறது .