சென்னை: தங்கர் பச்சான் எழுதி இயக்கியுள்ள படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. இதில் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று இப்படத்தின் டிரைலரை சந்துரு வெளியிடுகிறார். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப்படம், வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது.