எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதி இயக்கிய ‘வடக்கன்’ படத்துக்காக, எஸ்.ஜே.ஜனனி இசையில் தேவா பாடினார். ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதி, திரைக்கதையிலும் உதவி செய்த பாஸ்கர் சக்தி இயக்குனராக அறிமுகமாகும் படம், `வடக்கன்’.
தமிழ்நாடு முழுவதும் வட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருவதன் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, வேடியப்பன் தயாரித்துள்ளார். கூத்துப்பட்டறை மாணவர் குங்குமராஜ் ஹீரோவாகவும், பாரதிராஜா கண்டுபிடிப்பு வைரமாலா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஜனனி இசையில் ரமேஷ் வைத்யா எழுதிய பாடலைப் பாடிய தேவா, பாடல் வரிகளைப் பாராட்டினார்.