சென்னை: மணிரத்னம் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க உள்ளது. இதில் வில்லனாக நடிக்க சிம்புவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லன் என்பதால், உடனே சிம்புவும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் படத்தை ரெட் ெஜயன்ட் மூவிஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
70