அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பாலசரவணன் நடிப்பில், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விஷால் வெங்கட் இயக்கும் படத்துக்கு பெயரிடவில்லை. கெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுரேந்தர் சிகாமணி தயாரிக்கின்றனர். இமான் இசை அமைக்கிறார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் கதை, திரைக்கதை எழுதுகின்றனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பி.எம்.மகிழ்நன் வசனம் எழுதுகிறார். அர்ஜூன் தாஸ் கூறுகையில், ‘இப்படத்தில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. நானும், ஷிவாத்மிகாவும் இமானின் தீவிர ரசிகர்கள். இப்போது அவரது இசையில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறோம். விஷால் வெங்கட் மதுரைக்கு வந்து மூன்று மணி நேரம் கதை சொன்னார். அப்போதே ஓ.கே சொல்லி, அவரை நம்பி என்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டேன். ‘அநீதி’ படத்துக்கு ஆதரவு கொடுத்தது போல் இப்படத்துக்கும் ஆதரவு கொடுங்கள்’ என்றார்.
38