பிரஜின் நடிப்பில் வெளியான ‘டி3’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர், பாலாஜி. அவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘நிற்க அதற்கு தக’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நகுல் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏ.ஜே என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வயலினில் இருந்து ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
75