விஜயகாந்த், சிம்ரன் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கிய எம்.பாரதி கணேஷ் தற்போது இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. 5E கிரியேஷன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரீஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஷாம், ராதாரவி, சந்தானபாரதி, மானஸ்வி கொட்டாச்சி நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.பாரதி கணேஷ் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சிட்டி கிளப் ராஜேந்திரன், எஸ்.எஸ்.அன்பு தட்சிணாமூர்த்தி இணை தயாரிப்பு செய்கின்றனர். 5 ஜி காலத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல், செயல்பாடு, சமூக சூழ்நிலை, வாழ்வியல் பார்வை பற்றிய கருத்துகளை விளக்கும் விதமாக, சென்னை மாநகரை கதைக்களமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது.
இயக்குனர் உ எம்.பாரதி கணேஷ் தற்போது இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது
66