யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர், விஜயகுமார் ராஜேந்திரன். பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’, ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து அருள்நிதி ஹீரோவாக நடித்த ‘டி பிளாக்’ என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் விஜயகுமார் ராஜேந்திரனுக்கும், அவரது காதலி நட்சத்திராவுக்கும் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கோவையில் நடந்த திருமண விழாவில் திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விஜயகுமார் ராஜேந்திரனின் பெற்றோர் ராஜேந்திரன், லதா மற்றும் நட்சத்திராவின் பெற்றோர் மூர்த்தி, ஷீபா ஆகியோர் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
104