சென்னை: தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ்.தங்கராஜ் தயாரிக்க, இயக்குனர் சி.வி.குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் எழுதி இயக்கும் படத்தில், இயக்குனர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் காட்சியை தயாரிப்பாளரும், இயக்குனருமான சி.வி.குமார் இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அருண், நிரஞ்சனா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் நடிக்கின்றனர். தான் இயக்கிய சில படங்களில் ஓரிரு காட்சியில் மட்டுமே நடித்துள்ள சீனு ராமசாமி, இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது. புதிய சமுதாய மாற்றத்துக்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று விஜய் கார்த்திக் சொன்னார். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூக நீதி என்ற கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் இப்படம் பதிவு செய்யும் என்றும் அவர் சொன்னார். சென்னையை தொடர்ந்து விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஏ.எஸ்.சூரியா ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்கிறார். எஸ்.ஸ்ரீராம் இணைந்து தயாரிக்கிறார்.
78