சென்னை, ஜூன் 15: ‘பிச்சைக்காரன் 2’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் படம், ‘வள்ளி மயில்’. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய்சரவணன் தயாரிக்க, சுசீந்திரன் எழுதி இயக்குகிறார். தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் திண்டுக்கல், கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 1980களில் நாடகக்கலை பின்னணியில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகிறது. 1980 காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், முன்னதாக திண்டுக்கல்லில் 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. விஜய் ஆண்டனி ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமய்யா, ஜி.பி.முத்து நடிக்கின்றனர். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைக்கிறார்.
32