சென்னை: துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன். துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் மலையாள நட்சத்திரங்கள். அதே சமயம் இவர்கள் தமிழிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் அட்லியின் உதவியாளர் கார்த்திகேயன் வேலப்பன் படம் இயக்குகிறார். இதில்தான் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். தமிழில் உருவாக உள்ள இந்த படத்துக்கு கோலி என பெயர் வைக்க யோசித்து வருகிறார்கள். இது முழு நீள ரொமான்டிக் படமாக உருவாகிறது. துல்கரும் கல்யாணியும் நடிப்பதால் இந்த படத்தை மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆக்ஷன் படங்களை இயக்கி வரும் அட்லி, தனது முதல் படமாக ராஜா ராணி என்ற காதல் கதையைத்தான் படமாக எடுத்தார். அதே பாணியில் தானும் காதல் ஜானரில் படம் செய்யப்போவதாக கார்த்திகேயன் வேலப்பன் கூறுகிறார்.
45