சென்னை: பேஷன் டிசைனிங் படிக்க இருப்பதாக இனியா தெரிவித்தார். வாகை சூட வா, மௌன குரு, கண் பேசும் வார்த்தைகள், அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. அவர் தொடங்கிய அனோரா ஸ்டுடியோ முதலாம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதுகுறித்து இனியா கூறியது: சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பவில்லை. கடவுள் கொடுத்த அறிவை வைத்து பிசினஸிலும் கவனம் செலுத்த முடிவு செய்துதான், இந்த ஸ்டுடியோவை தொடங்கினேன். இங்கு வாடகைக்கு உயர்தர பெண்கள் ஆடைகள் கிடைக்கும். போட்டோ ஷூட் எடுக்கலாம். ஆடை தயாரிப்பு வேலைகள் நடக்கிறது. இந்த பிசினஸ் எனக்கு கைகொடுத்துள்ளதால், இப்போது பேஷன் டிசைனிங் படிக்கப் போகிறேன். இந்த பிசினஸை ஆன்லைனிலும் நடத்துகிறேன். இப்போது துபாயில் இதை விரிவுபடுத்த இருக்கிறேன். இந்த வாரம் வெளியாகும் தூக்குதுரை படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளேன். மலையாளத்தில் ஒரு படம், வெப்சீரிஸ் என நடித்து வருகிறேன். பிசினஸில் ஈடுபட்டாலும் சினிமாவை மறக்க மாட்டேன். அதிலும் நான் கேரளா பெண்ணாக இருந்தாலும், தமிழகமும் தமிழ் சினிமாவும்தான் எனக்கு முக்கியம்.
213