சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இப்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ என இரு படங்கள் உருவாகி வருகிறது. நேற்றுமுன்தினம் ஷங்கருக்கு பிறந்தநாள். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நடந்த பார்ட்டியில், திரையுலகை சேர்ந்த விக்ரம், ராம் சரண், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்ராஜ், வெற்றிமாறன், லிங்குசாமி, விக்னேஷ் சிவன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பார்ட்டியில் கலந்துகொண்டு ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
56