சென்னை: இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 175 தமிழ்ப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. வழக்கம்போல் இந்த மாதமும் அதிகமான தமிழ்ப் படங்கள் திரைக்கு வருகின்றன. வரும் 6ம் தேதி விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா நடித்த ‘ரத்தம்’, விக்ரம் பிரபுவுடன் விதார்த், ஸ்ரீ, ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா அய்யப்பன் நடித்த ‘இறுகப்பற்று’, நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் ‘மார்கழி திங்கள்’, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய ‘800’, திரிஷா நடித்த ‘தி ரோட்’, வெங்கட் பிரபுவுடன் சினேகா நடித்த ‘ஷாட் பூத் த்ரீ’, புதுமுகங்களின் ‘இந்த கிரைம் தப்பில்ல’, ‘எனக்கு END-யே கிடையாது’, ‘என் இனிய தனிமையே’, ‘தில்லு இருந்தா போராடு’ ஆகிய 10 நேரடி தமிழ்ப் படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் இப்படங்களில் இருந்து ஏதாவது சில படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
37