இசை அமைப்பிலும், நடிப்பிலும் பிசியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் ஒரு படம், ‘அடியே!’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டார். ‘திட்டம் இரண்டு’ விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக கவுரி கிஷன் நடிக்க, முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் நடித்துள்ளனர்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். பிரபா பிரேம் குமார் தயாரித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், ‘தமிழில் ஏராளமான அறிவியல் புனைவுக்கதைகள் வெளியாகியுள்ளன. ஆனால், அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன், மல்ட்டிவெர்ஸ் தொழில்நுட்பப் பின்னணியில் காதலைச் சொல்வதில், ‘அடியே!’ படம்தான் முதல் படைப்பு’ என்றார்.