இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே ‘தெனாலி’, ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களை தயாரித்திருந்த நிலையில், தற்போது ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதில் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய சூரியகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகின்றனர்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், சித்தாரா, முனீஷ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, ‘கேஜிஎஃப்’ கருடா ராமச்சந்திரா, அனுபமா குமார் நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. ராம் சரண் ஒளிப்பதிவு செய்தார்.