திருவனந்தபுரம்: பள்ளிக்கூடம் செல்லும்போது யானை தாக்கி கொல்லப்பட்ட ஆதிவாசி ஆசிரியை ஒருவரின் சம்பவங்களை மையப்படுத்தி மலையாளத்தில் உருவாகும் ‘தயா பாரதி’ படத்தில் பாடகர் ஹரிஹரன், நேகா சக்சேனா, அப்பாணி சரத், தினேஷ் பிரபாகர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குனர் கே.ஜி.விஜயகுமார் கூறுகையில், ‘நாள்தோறும் பழங்குடியினர் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி படத்தில் சொல்கிறோம். மும்பை பாடகராகவும்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராகவும் ஹரிஹரன் நடிக்கிறார்.
வனப்பகுதிக்கு வரும் அவர், அங்குள்ள பழங்குடியின மாணவர்களையும், அவர்களின் ஆசிரியர்களையும் சந்திக்கிறார். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தெரிந்துகொண்ட அவர், பிறகு அவர்களின் பிரச்னைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு எப்படி கொண்டு செல்கிறார் என்பது கதை. தவிர, 2 பாடல்களையும் பாடியிருக்கிறார். ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகி நஞ்சம்மா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்’ என்றார்.