சென்னை: விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். ருத்ரா நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தர்புகா சிவா படத்திற்கு இசையமைக்கிறார். அதே சமயம் இந்த படத்தை விஷ்ணு விஷால், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், மற்றும் டி கம்பெனி கே.வி.துரை ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடிக்கிறார். டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரணவ் ஆர். எடிட்டிங் செய்கிறார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாக பணிகளிலும் கிரியேட்டிவ் டீமிலும் ருத்ரா பணியாற்றியுள்ளார். ஹீரோயின் மிதிலா பால்கர், கார்வான், திரியங்கா உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். மாடர்ன் லவ் வெப்சீரிஸில் கண்ணுலே ஹார்ட் இருக்குற எமோஜி எபிஸோடை இயக்கிய கிருஷ்ணகுமார் ராம்குமார்தான் இந்த படத்தை இயக்குபவர்.
171