சென்னை: விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ என்ற படத்தை தயாரித்த செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரில்லர் கதை கொண்ட ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ‘படை வீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய தனா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஹீரோயினாக ரியா சுமன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரண்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் நடித்துள்ளனர். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் ஒருவனின் கதையாக ‘ஹிட்லர்’ படம் உருவாகியுள்ளது.
62